Sunday, July 12, 2020.

இது புதுசு

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். புளியாவத்தை இன்ஞஸ்ரீ...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...

தலைநகரில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வர்த்தகர்கள் முன்வாருங்கள்’

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டப் பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களுக்கு மலையகப் பகுதிகளைச் சேர்ந்த நகர வர்த்தகர்களும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டே மலையக நகர வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பகாலம் முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் தாம் பெறுகின்ற சம்பள முற்பணம் மற்றும் சம்பளம் போன்றவற்றை மலையக பகுதி நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்று அவற்றை மாதம் தோறும் வழங்கி பொருள் மற்றும் சேவைகளை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மலையக நகரப்பகுதிகளில் சிறு வியாபாரிகளாக இருந்தவர்கள் இன்று இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

அத்துடன் நாட்டிலும் தமிழகத்திலும் பல கோடி பெறுமதியான சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்களாகவும் திகழ்கின்றனர்.

குறிப்பாக நுவரெலியா, கந்தப்பளை, ராகலை, உடபுசல்லாவை, ஹைபொரஸ்ட், புசல்லாவை, றம்பொடை, பூண்டுலோயா, தலவாக்கலை, நானுஓயா, லிந்துலை, ,அக்கரப்பத்தனை, மன்றாசி, டயகம, பத்தனை, ஹற்றன், கொட்டகலை,டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை, மஸ்கெலியா,

புளியாவத்தை,கெம்பியன்,வட்டவளை,கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை,பண்டாரவளை, ஹப்புத்தளை போன்ற நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் இன்று நல்லதொரு நிலையில் இருப்பதற்கு தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் உழைப்பின் மூலம் அவர்கள் பெற்ற வேதனத்தை இந்த வர்த்தர்களுக்கு வழங்கி மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மூலமாகவே என்பதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வர்த்தகர்கள் தமது நகரத்திலுள்ள வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிதியை வாரி வழங்குகின்ற போதும் தமது உயர்வுக்கு பாடு பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக கரிசனை காட்டுவது கிடையாது.

பணம் கொடுத்தால் பொருள் கொடுப்போம் இதுதான் எமது வியாபாரம் என்று அவர்கள் வியாக்கியானம் பேசினாலும் தோட்டத் தொழில்துறை முடங்கினால் இவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

இந்தப் பின்னணியில் இன்று தோட்டப் பகுதியில் வாழுகின்ற மக்கள் தமக்கு உலர் உணவு பொருட்களை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் நகர வர்த்தக சங்கங்கள் ஊடாகவும் வணக்கஸ்தல அமைப்புக்கள் ஊடாகவும் தோட்டப் பகுதி மக்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டுமெனறு மலையக மக்கள் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Posts

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். புளியாவத்தை இன்ஞஸ்ரீ...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...

தலைநகரில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

Don't Miss

06 மாவட்டங்களை தவிர்த்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. இன்று (30) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு...

‘கொரோனாவுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும்’

கொரோனா கிருமித்தொற்றுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் வைரஸ் தொற்றால்...

பதுளையின் 4 நகரங்களுக்கு இன்று பூட்டு

பதுளை மாவட்டத்தில் இன்று (30) ஊடரங்கு உத்தரவை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக,...

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா...

மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத தந்தை – நெகிழ வைக்கும் நிகழ்வு

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் தனது மகளின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத தந்தை தொடர்பான செய்தி அவிசாவளை - எஸ்வத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. சுற்றுலா பேருந்து சாரதியான குறித்த நபரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.