Thursday, June 4, 2020.

இது புதுசு

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். புளியாவத்தை இன்ஞஸ்ரீ...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...

தலைநகரில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக முறியடித்து மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரச அதிபர், தோட்டப்பிரிவுகளுக்கு பொறுப்பான முகமையாளர்கள், மாவட்டத்துக்குப் பொறுப்பான உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள், 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஊருக்கு வருபவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகள், மருத்துவம் ஆகியன தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டன.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

“கொரோனா வைரஸ் கொடூரமான நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

எனவே, தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்குமாறு முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயத்துறை அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர். விதைகள் விநியோகிக்கப்படும் வழிமுறைகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.

தோட்டப்பகுதிகளில் எத்தனை ஏக்கர் தரிசு நிலம் உள்ளது, ஒருவருக்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கலாம் போன்ற விபரங்களை வழங்குவதற்கு 10 நாட்கள் அவகாசத்தை முகாமையாளர்கள் கோரினர். அந்த விபரங்கள் முன்வைக்கப்பட்டதும் விவசாயத்தை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

5 ஆயிரம் ரூபா யார், யாருக்கு வழங்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிகளாக இருந்து தற்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும். கிராம சேவகர்கள் ஊடாக பெயர், விபரம் திரட்டப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் தோட்டங்களுக்கே சென்று வழங்கப்படும்.

அதேவேளை, கொழும்பில் இருந்து அதிகமானவர்களை அழைத்துவர ஏற்பாடு இடம்பெற்று வருகிறது. எனினும் மருதானை சம்பவத்தின் பின்னர் அது தடைபட்டது. தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

பதற்றத்தால் அதிகளவானவர்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துகின்றனர். எனவே , பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஊருக்கு வந்த பின்னர் வீட்டுக்குள் இருந்து அரசாங்கத்தினதும், சுகாதார தரப்பினரினதும் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என்றார்.

(க.கிஷாந்தன்)

Latest Posts

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். புளியாவத்தை இன்ஞஸ்ரீ...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...

தலைநகரில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

Don't Miss

06 மாவட்டங்களை தவிர்த்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. இன்று (30) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு...

‘கொரோனாவுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும்’

கொரோனா கிருமித்தொற்றுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் வைரஸ் தொற்றால்...

பதுளையின் 4 நகரங்களுக்கு இன்று பூட்டு

பதுளை மாவட்டத்தில் இன்று (30) ஊடரங்கு உத்தரவை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக,...

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா...

மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத தந்தை – நெகிழ வைக்கும் நிகழ்வு

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் தனது மகளின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத தந்தை தொடர்பான செய்தி அவிசாவளை - எஸ்வத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. சுற்றுலா பேருந்து சாரதியான குறித்த நபரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.